Monday, August 13, 2012

ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்


அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
உன்னுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீ ஆரோக்கியமாக இருப்பதாகவும், நீ கடந்த மூன்று வாரங்களாக கடைபிடித்து வரும் நோன்பு உன்னை ஆரோக்கியமானவனாக வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தாய். உனக்கு இருந்த சில வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த ரமளான்  காலகட்டத்தில் காணப்படாமல் போய்விட்டது என்று நீ குறிப்பிட்டு இருந்தாய், மேலும் நீ அந்த பிரச்சனைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளும் பயன்படுத்தும் அவசியம் இந்த மாதத்தில் வரவில்லை என்று நீ எழுதியிருந்தாய். உன் ஆரோக்கியம் குறித்து நீ சொன்ன விவரங்கள் அனைத்தையும் கேட்டு நான் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன்.  அம்மாவிற்கு, அப்பாவிற்கும் இதனை நான் தெரிவித்த போது, அவர்களும் உன் சரீர சுகச்செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அவ்வப்போது உன் சுகச்செய்திகளை தொடர்ந்து பகிர்ந்துக்கொள்.
நேற்று நான் எழுதிய விவரங்களை படித்தவுடன், நீ தாமதமில்லாமல், எனக்கு பதில் எழுதியிருந்தாய். நேற்று நான் முஹம்மது பற்றி சொன்ன விவரங்களை பற்றிய ஆய்வை பிறகு செய்வேன், ஆனால், என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன? என்று என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தாய்.அதாவது போரில் பிடிபடும் பெண் அடிமைகளை மிகவும் கொடுமையாக  நடத்தும் படி பழைய ஏற்பாடு கூறுகிறது என்று குற்றம் சாட்டினாய், ஆனால், பெண் அடிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி குர்-ஆன் கூறுகிறது, அதாவது அவர்களுக்கு ஒரு ஆண் துணை தேவை, அவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் இம்மூன்றும் தேவை என்பதை கவனத்தில் கொண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கியுள்ளான், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் இவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெண்களுக்கு கவுரவம் கொடுப்பதில் குர்-ஆனும் இஸ்லாமும் கவனமாக இருக்கிறது, ஆனால், பைபிளோ அப்படிப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடிக்கச் சொல்லி அவளை அவமானப்படுத்துகிறது. இந்த விவரம் பற்றி என்னுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தாய்.
தம்பி, நீ மேற்கண்ட விவரங்களை எனக்கு எழுதும் போது, உன் கேள்விகளுக்கு அடிப்படையாக இருக்கும் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்களை குறிப்பிடாமல் எழுதியிருந்தாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீ அவசரத்தில் எழுதுகிறாய், மற்றும் உன் இஸ்லாமிய சகோதரர்கள் சொன்ன விவரங்களை சரி பார்க்காமல், அப்படியே என்னிடம் கேட்டுள்ளாய்.
நான் இப்போது இந்த கடிதத்தில் நீ பைபிள் பற்றி கூறிய குற்றச்சாட்டிற்கு முதலில் பதில் எழுதுகிறேன், மற்றும் குர்-ஆன் எப்படி அடிமைப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, கவுரப்படுத்துகிறது என்பதைப் பற்றி நாளைக்கு உனக்கு எழுதுவேன்.
1) பெண் போர்க்கைதிகளை திருமணம் செய்துக்கொள்ளுதல்:
பழைய ஏற்பாட்டில் யூத மக்களை எகிப்திலிருந்து கொண்டு வந்து கானானை அவர்களுக்கு கொடுக்கும் போது, சில கட்டளைகளை தேவன் கொடுத்தார். அவர்கள் ஒரு புதிய நாட்டில் வாழப்போகிறவர்கள்  என்பதாலும், அவர்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக எகிப்தில் வாழ்ந்தபடியினாலும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை தேவன் மோசே மூலமாக கொடுத்தார். அவைகளில் சில சட்டங்கள், நாடு, அரசாங்கம், சட்ட ஒழுங்கு மற்றும்  குற்றம் புரிந்தவர்களுக்கான  தண்டனைகள் போன்றவைகள் பற்றி இருந்தது. இன்னும் சில சட்டங்கள் அவர்கள் எப்படி தங்கள் மார்க்க விஷயங்களை கடைபிடிக்கவேண்டும், தேவனை எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்பவைகள் பற்றி கொடுக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்லால் பொதுவாக எப்போதும் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளையும் கொடுத்தார், உதாரணத்திற்கு பத்து கட்டளைகளைச் சொல்லலாம்.
இப்படிப்பட்ட சட்டங்கள் தரப்படும் போது, போரில் பிடிப்பட்ட பெண்களை, ஆண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அனேக கட்டளைகளையும் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தைப் பொருத்தமட்டில், பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி மட்டுமே நான் விளக்குகிறேன். அடிமைகள் பற்றிய கட்டளைகளை நாம் பைபிளில் கண்டோமானால், நம் தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும் தெரியுமா? ஆனால், குர்-ஆனும், இஸ்லாமும் அடிமைகள் பற்றிச் சொல்லும் விவரங்களை கண்டால் நிச்சயமாக இவர் ஒரு இறைவன் தானா என்று எண்ணத்தோன்றும், தேவைப்பட்டால் இந்த விவரங்கள் பற்றி இன்னும் அதிகமாக வருங்காலங்களில் நான் உனக்கு எழுதுவேன். ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல, இந்த இரண்டு கடிதங்கள், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ்வின் உள்ளத்தையும், யெகோவா தேவனின் உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டும்.
சரி தம்பி, உன் கேள்விக்கான பைபிள் வசனங்களை இப்போது படிப்போமா? உபாகமம் 21:10 லிருந்து 14ம் வசனம் வரைக்கும் படிப்போம்.
21:10  நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
21:11  சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
21:12  அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,
21:13  தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
21:14  அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:10-14)
2) அடிமைப் பெண்ணை நீ விரும்பினால்:
 
குர்-ஆனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே யெகோவா தேவன் "அடிமைப் பெண்ணை" நீ விரும்பினால், அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், அவளை மனைவியாக்கிக்கொண்ட பிறகே அவளுடன் திருமண உறவில் ஈடுபடலாம் என்று சொல்லியுள்ளார்.  ஆனால், இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்-ஆன் (அல்லாஹ்) இப்படி சொல்லவில்லை, திருமணம் செய்யாமலேயே அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறது.
திருமணத்திற்கு வெளியே உடலுறவு இல்லை என்பதை பைபிள் சொல்கிறது. வசனம் 11ம் படி, ஒரு அழகான அடிமைப்பெண்ணை கண்டு, அவளை விரும்பினால், நீ அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், இவ்வசனத்தின்படி, ஒரு யூத ஆண், ஒரு அந்நிய அடிமைப்பெண்ணை விரும்பினால், திருமணம் தான் அவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், இந்த வசனத்தை ஒரு முறை மறுபடியும் படிப்போம்:
21:11  சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு,அவளை விவாகம்பண்ண விரும்பி,
இந்த வசனத்தில், "அவளை விவாகம்பண்ண விரும்பி" என்று வருகிறது. அதாவது ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளவேண்டும் என்று விரும்பினால், முதலில் திருமணம் செய்யவேண்டும் என்பது தான் ஒரு யூதனின் மனதில் தோன்றவேண்டிய முதல் எண்ணமாக இருக்கவேண்டும்.  வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், திருமணம் பந்தமில்லாமல் உடலுறவு பற்றி ஒரு யூதன் நினைக்கவே கூடாது.  ஆனால், ஒரு முஸ்லிமின் நிலை இதற்கு எதிர் மறையாக  உள்ளது, இதனை அடுத்த கடிதத்தில் விவரமாக பார்ப்போம்.
3) பழயவைகளை மறந்து, தன் குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள்:
 
ஒரு யூதன் ஒரு அடிமைப்பெண்ணை விரும்பினால், முதலாவது அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், குர்-ஆன் சொல்வது போல அவளை  திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளக்கூடாது. இது மட்டுமா, தன் குடும்பத்தை இழந்த அந்தப் பெண் திருமண வாழ்விற்கு உடனே தயாராகிவிடுவாளா? நிச்சயமாக இல்லை. பைபிளின் படி:
 
அ) அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துகொண்டு வந்து, அவளை சுத்திகரித்து (அவளுடைய தலைமயிரை சிறைத்து, நகங்களை சுத்தப்படுத்தி, அப்பெண் பிடிபட்டபோது அணிந்து இருந்த பழைய உடைகளை நீக்கி, வேறு ஆடைகளை ஆடைகளை உடுத்தி) அவள் தன்குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அவளுக்கு தரப்படவேண்டும். (துக்கம் கொண்டாடுவது என்பது மனிதனுக்கு நல்லது, அவனுடைய காயப்பட்ட மனம் சுகமாக்கப்படும்). தன்னையும் மதித்து தனக்கு கொடுக்கப்பட்ட இந்த காலகட்டத்திற்காக அந்தப்பெண்  நன்றியுள்ளவளாக இருப்பாள்.
 
ஆ) பழயவைகள் அனைத்தையும் அதாவது தான் ஒரு அடிமைப்பெண் என்பதை மறக்கவைத்து, தனக்கும் ஒரு யூதப்பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையைப்போன்ற உரிமை உண்டு என்பதை நிலை நாட்ட, அந்தப் பெண் அடிமையாக பிடிக்கப்பட்டபோது அணிந்திருந்த உடைகளை நீக்கி, நல்ல உடைகளை உடுத்துவிக்கப்படவேண்டும். தன் குடும்ப நபர்களுக்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும்.
இ) இந்த முப்பது நாட்கள், அந்த ஆண் இந்த பெண்ணை தொந்திரவு செய்யக்கூடாது, இவளுக்கு பாதுகாப்பு அவனே தரவேண்டும்,உடவு உடை இருப்பிடன் இந்த மனிதனே கொடுக்கவேண்டும், அவனுடைய வீட்டிலேயே இந்த பெண் 30 நாட்கள் இருக்கவேண்டும்.
ஈ) இப்படி முப்பது நாட்கள் அந்த பெண் புது வாழ்விற்கு தயாராகிறாள், அந்த ஆணின் மீது சிறிது சிறிதாக அன்பு வர ஆரம்பிக்கும்.
உ) இந்த கட்டளை இல்லையென்றால், அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, அடிமைபெண் தானே, நான் விலைக்கொடுத்து வாங்கினேன் என்றுச் சொல்லி, அவளை கற்பழிக்க மனிதன் முயலுவான் ( இதனைத் தான்குர்-ஆன் அனுமதிக்கிறது). ஆனால், யெகோவா தேவன் இதனை கட்டளையாக  கொடுத்து இருப்பதினால், அவளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் 30 நாட்கள் அவளுக்கு கிடைக்கிறது.
ஊ) தம்பி, இப்போது நீ "ஏன் மொட்டை அடிக்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பலாம். இந்த வசனத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நீ கவனித்தால், ஒரு மணப்பெண்ணை தயார் படுத்துவது போல காணப்படும். அதாவது, புதிய வாழ்வு வருகிறது, ஒரு புதிய ஆரம்பம் வாழ்வில் தொடங்கப்போகிறது, எனவே, தலை மயிரை சிறைப்பது ஒரு புதிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது. தலைமயிர் மட்டுமல்ல, நகங்களையும் களையவேண்டும் என்றும் வசனம் கூறுகிறது. இந்த செயல் அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு அல்ல, அவளுக்கு ஒரு புதிய ஆரம்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியை அல்லது மாற்றத்தை தெரிவிக்க இப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்பெண் அந்த குடும்பத்தில் தொடர்ந்து மொட்டை அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வசனம் சொல்லவில்லை, ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செய்யப்படவேண்டும். மனதளவில் தான் ஒரு புதிய வாழ்விற்குள் நுழையப்போகிறாள் என்ற உணர்வு அவளுக்கு வருகிறது.
4) இப்போது கணவன் மனைவி என்ற உறவு முறையில் புதிய வாழ்வை தொடங்கலாம்:
அந்த முப்பது நாட்கள் அவளை இந்த ஆண் நெருங்கக்கூடாது, அவள் தன் துக்கத்தை நினைத்து அழுது, தன் குடும்ப நபர்களை பிரிந்த துக்கத்தை நினைத்து, அழுது, மன சாந்தி அடையவேண்டும். அதன் பிறகு, அந்த யூதன் அவளுக்கு கணவனாக இருக்கவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும். ஆனால், குர்-ஆன் என்ன சொல்கிறது? திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அப்பெண்ணோடு உடலுறவு கொள்ளலாம். அந்தோ பரிதாபம்.
21:13  தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
நன்றாக கவனித்துப்பார் தம்பி, "அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாக இருப்பாள்", என்று வசனம் சொல்கிறது, கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமே தாம்பத்திய உறவு, அதற்கு வெளியே அது விபச்சாரம் எனப்படும். எப்படி பைபிள் ஒரு அடிமைப் பெண்ணுக்காக பேசுகிறது என்பதை கவனி, எப்படி இந்த அந்நிய நாட்டுப் பெண் ஒரு யூதனுடைய வீட்டிற்குள் நடத்தப்படுகிறாள் என்பதை கவனி.
5) அவளை மறுபடியும் விற்கும் உரிமை உனக்கு இல்லை:
 
தம்பி, யெகோவா தேவன் எப்படி தன்னை தொழுதுக்கொள்ளும் ஆண்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் என்பதைப் பார்.  இந்த பெண் நான் விலைக்கொடுத்து வாங்கிய அடிமை தானே என்றுச் சொல்லி, அவளோடு அனேக நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் அவளை அடிமையாக விற்க உனக்கு உரிமை இல்லை. எனவே, உனக்கு அவள் பிரியமானவளாக இல்லாமல் போனால், அவளை அப்படியே விடுதலையாக போகவிட்டுவிடு,  மறுபடியும் விற்று அவளை அடிமையாக்காதே.
21:14  அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:14)
அவள் உனக்கு மனைவியாக இருந்தாள் நீயும் புருஷனாக இருந்தாய். அவளோடு நீ உடலுறவு கொண்டபடியினாலே "நீ அவளை தாழ்மைபடுத்தினாய்", இதற்கு உனக்கு தண்டனையாக, நீ மறுபடியும் அவளை விற்று லாபம் சம்பாதிக்க உனக்கு உரிமை இல்லை.
தம்பி, அல்லாஹ் இந்த விஷயம் பற்றி என்ன சொல்கிறார்? வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட பெண்களை அனேக ஆண்டுகள் கற்பழித்துவிட்டு, மறுபடியும் அவளை விற்க அல்லாஹ் அனுமதி தருகிறார், இதுவா அடிமைப்பெண்கள் பற்றி அல்லாஹ் கொண்ட அக்கரை.

தம்பி, இதுவரை படித்த விவரங்கள் ஏதோ இரகசியம் அல்ல. தமிழில் அந்த நான்கு வசனங்களை நீயே படித்து இருந்தால், புரிந்துக்கொண்டு இருப்பாய். ஆனால், இஸ்லாமியர்களின் சொற்களைக் கேட்டு,  நீ ஆய்வு செய்யாமல் கேள்வி எழுப்புகிறாய். யெகோவா தேவன் எப்படி ஒரு அந்நியப்பெண்ணைப் பற்றி எழுதியுள்ளார் என்பதை நீயே கவனித்துப் பார்.
1) ஒரு யூதன் திருமணம் செய்யாமல் அடிமைப்பெண்ணை தொடக்கூடாது,
2) அந்த பெண்ணுக்கு 30 நாட்கள் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட தன் வீட்டிலேயே அனுமதி அளிக்கவேண்டும்.
3) இந்த 30 நாட்களிலும் அவளை தொடக்கூடாது.
4) அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, அவளுக்கு புருஷனாக அவளோடு வாழவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.
5) மேலும், அவளை மறுபடியும் விற்க இந்த யூதனுக்கு அனுமதி இல்லை, அந்தப் பெண் விடுதலையான பெண்ணாக வாழ விட்டுவிடவேண்டும்.
பார்த்தாயா தம்பி, பைபிளின் தேவன் எப்படி அந்நிய பெண்ணுக்காக கட்டளைகளை கொடுத்துள்ளார், இவர் தான் உண்மையான தெய்வம். இப்படிப்பட்டவரை தொழுதுக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் மகிழ்கிறார்கள்.  ஆனால், நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் அடிமைப்பெண்களின் திருமணம் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன்.
நான் சொன்ன விவரங்களை ஒரு முறை பரிசோதித்துப் பார். யேகோவா தேவன் அடிமைப்பெண்கள் விஷயத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார். அல்லாஹ் அடிமைப்பெண்களை அவமானச் சின்னங்களாக மாற்றுகிறார்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

ரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது


அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
நீ நாள் தோறும் மனமாற்றமடைந்து வருவதை நீ எனக்கு அனுப்பிவருகிறமெயில்களிலிருந்து கண்டுவருகிறேன்உன் உள்ளத்திலிருந்து வரும்உண்மையான வார்த்தைகளை காணும்போது நான் மிகவும் சந்தோஷம்அடைகிறேன்நீ தற்பொழுது இருக்கும் நாட்டில் நியாயப்பிரமாண சட்டங்கள்ஷரியா எனும் பேரில் கடைப்பிடிக்க படுவதாக கூறியிருந்தாய்ஆம் நானும் அந்தசெய்தியை கேள்விபட்டிருக்கிறேன்நீ பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் பற்றி கேட்டபடியினால், பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையைப் பற்றி உன்னோடு நான் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாகபிறனுடைய வீட்டையும்அவனுடைய நிலத்தையும்அவனுடைய வேலைக்காரனையும்அவனுடைய வேலைக்காரியையும்அவனுடைய எருதையும்அவனுடைய கழுதையையும்பின்னும் பிறனுக்குள்ளயாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாகதம்பி இந்த கட்டளையோடுமுஹம்மதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுபார்தனது வளர்ப்பு மகன் ஜையத்தின்மனைவியை இச்சித்த சம்பவத்தை நீ அறிந்திருக்கிறாய்இச்சித்தது மாத்திரமாமனைவியாக கொண்டதும் உனக்குத்  தெரியும்இதனை உனது இஸ்லாமியநண்பர்கள் "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த நபிகளார்" என்றுமிகவும் பெருமையாக பேசுவார்கள்இது நியாயப்பிரமானத்தை மீறிய செயலாகும் என்று சொன்னால் அவர்கள் திருப்பி கேற்பார்கள் "உங்கள் பைபிளில் சிலசம்பவங்கள் இதே போல இருக்கின்றதே காணவில்லையா" என்றுஉனதுநண்பர்களுக்கு ஒரு விசயம் புரிவதேயில்லை.

பைபிளில் நோவாயாக்கோபுதாவீது போன்றோர் செய்த பாவங்கள்குறிப்பிடப்பட்டுள்ளதுஆனால் இறைவன் அவற்றை நியாயப்படுத்தவில்லை.நியாயப்பிரமானம் கொடுக்கப்பட முன் செய்தவர்களின் தவறுகள்குறிப்பிடப்பட்டுள்ளதோடுநியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்செய்தவர்களின் தவறுகளுக்காக பெற்ற தண்டனைகளும் பைபிளில் காணலாம்.
ஆனால் முஹம்மது செய்த பாவங்களை நியாயப்படுத்தி வஹி இறங்குவது தான்வேடிக்கையாகவுள்ளது.
. . . .நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்). உமக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும் . . . .(குர்ஆன் 33:50) 
இந்த வசனத்தை நீ அரபியில் பல முறை ஓதியிருப்பாய்ஒரு முறையாகிலும்சிந்தித்திருப்பாயாகுர்ஆனில் ஒரு சொல்லுக்கு 10 நன்மையெனும்அடிப்படையில் பொருள் புரியாமல் மந்திரம் ஓதுவது போன்று ஓதுவதையேபாமர மக்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் போதிக்கப்பட்டு வருவதை நான்காண்கிறேன்உனக்கும் அப்படித் தான் போதித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்குமாறு சொல்கிறதுஅதனாலோ என்னவோஇஸ்லாமியர் சிந்திப்பதேயில்லைஇஸ்லாமியர்கள் குர்-ஆன் வசனங்களை சிந்திக்கவேண்டுமென்றால், முதலாவது அவர்களுக்கு வசனம் புரியவேண்டுமே, அவர்கள் அரபியில் படித்தால் எப்படி புரியும்?
இந்த வசனத்தை சிந்தித்துபார்இது முஹம்மதுவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டஒரு சிறப்புச் சலுகைஅதாவது எந்த ஒரு முஸ்லிம் பெண்ணையும் முஹமதுவிரும்பினால் அவளை திருமம் செய்ய முஹம்மதுவுக்கு அல்லாஹ் சிறப்புச்சலுகை கொடுக்கிறான்.
நியாயப்பிரமானம் போதிக்கிறது பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாகஎன்றுஆனால் குர்ஆன் முஹம்மதுவுக்கு தனது மகனுடைய மனைவியையும்இச்சித்ததால் சொந்தமாக்கிகொள்ள வரம் கொடுக்கிறதுஎது இறைவேதமாகஇருக்க தகுதியுள்ளது என்று  சிந்தித்தால் உண்மை புரியும்.

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்துநீரும் அவர் மீது அருள் புரிந்தீரோஅவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததைமனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்ஆனால் அல்லாஹ் அவன் தான்நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள்,தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால்அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.  ( குர்-ஆன் 33:37)

தம்பிஎமது ஊரில் அநேக இஸ்லாமியர் பிள்ளைகளை தத்தெடுக்திருக்கின்றனர்.அவர்களில் யாராவது இது எனது பிள்ளையில்லையென்று சொல்வதை நீசெவிமடுத்திருக்கிறாயாகடும் கோபத்தில் சொந்த பிள்ளைகளை கூட "நீ என்பிள்ளையில்லையென்று" சொல்வார்கள்ஆனால் பொதுவாக முழு உலகிலும்வளர்ப்பு மகனையும் மகன் என்று தான் சொல்வார்கள்அந்த காட்டுமிறாண்டிஅரபியரும் அப்படிதான் அழைத்தார்கள்ஆனால் முஹம்மது ஜைதுமனைவியின் அழகை கண்ட நேரத்திலிருந்துதான் வளர்ப்பு மகன் "மகன் அல்ல"என்ற கட்டளையை அல்லாஹ் இறக்குகிறான்சிந்திப்பவர்களுக்கு இதில்படிப்பினையுண்டு.

ஜைதின் மனைவியை முஹம்மது திருமம் செய்ததை "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வுகொடுத்த மாநபி" என்று வர்ணிப்பார்கள்ஆனால்முஹம்மதுவின் மரணத்தின் பிற்பாடு அவருடைய அனைத்து மனைவிகளும்விதவைகள் ஆகிவிட்டார்கள்தனது மரணத்தின் பின்னும் அவர்களை யாரும்திருமம் செய்ய கூடாது என்பதற்காக அவர்களை முஃமீன்களின் தாய்மார்களாகஆக்கிவிட்டார் முஹம்மதுஅப்படியானால் முஃமீன்களின் தகப்பன் யாராகஇருக்கவேண்டும்முஹம்மது தான் தகப்பனாக இருக்கவேண்டும் என்று நீநினைப்பாய்ஆனால் குர்ஆன் சொல்கிறது.
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்,நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)

பார்த்தாயா இஸ்லாமிய நியாயத்தைதான் மனைவிகளை தனக்கு பின்பு யாரும்திருமணம் செய்து விட கூடாது என்பதற்காக தனது மனைவிமாரை எல்லாமுஸ்லீம்களுக்கும் தாய் ஆக்குகிறார்தனது மகனின் மனைவியை திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் யாருக்கும் தகப்பன் இல்லையென்றுவஹி வருகிறதுஇங்குள்ள முரண்களும் தில்லுமுல்லுகளும் உனக்கு நன்றாகபுரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வெளியில் இருக்கிற கவர்ச்சியை கண்டு நீ இஸ்லாத்துக்குள் நுழைந்துவிட்டாய்.இப்பொழுதுதான் நரக வாயிலிலிருந்துகொண்டுமிகவும் ங்காரங்கள் நிறைந்தகதவுகளை வைத்து வருகிறவர்களை கவரும் வகையில் காரியங்களைகாண்பித்துஅந்த கதவுகளுக்குள் நுழைந்த பிறகுதான் தெரியும் எரி நரகத்துக்குள்வந்துள்ளோம் என்றுஇப்பொழுது இதுதான் உனது நிலையாகவுள்ளது எனதருமைதம்பியே!
உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்டுகொள்ளதான் எனது இந்த பிரயாசம்.பரலோகக் கதவு உனக்காக இன்னும் திறந்துதான் இருக்கிறதுஎனது கர்த்தராகியஇயேசு சொன்ன இந்த வார்த்தைகளோடு இந்த கடிதத்தை முடிவு செய்கிறேன்.நாளை சந்திப்போம்.

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்குஉரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 

இப்படிக்கு,
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்