Saturday, December 22, 2012

அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்


அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்

கடந்த சில ஆண்டுகளில் விளைந்த மத எழுப்புதல்களில் மிகப்பெரிய மதஎழுப்புதல் கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களிடம் அல்லாமல், இஸ்லாமை பின்பற்றுபவர்களிடம் உண்டாகியிருக்கிறது என்றுச் சொல்வார்கள். கிறிஸ்த‌வத்திற்கு வெளியே, மிஷனரி தரிசனத்தோடு செயல்பட்டு பரப்பப்படுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும். இஸ்லாமிய பிரச்சாரக்காரர்களின் முக்கிய நோக்கம் "முழு உலகத்தையும் இஸ்லாமுக்கு மாற்றுவது" என்பதாகும், இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இஸ்லாமியரல்லாதவர்களை இஸ்லாமுக்கு அழைக்கவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அவர்களை முஹம்மதுவின் போதனைகளின்படி நடக்கச் செய்வதும், மத சடங்குகளை செய்யச் செய்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இஸ்லாமியரல்லாதவர்களை அழைக்கும் இந்த அழைப்பிற்கு "தாவா (dawah)" என்று பெயராகும்.
துரதிஷ்டவசமாக, இஸ்லாமியர்களில் சிலர், எல்லாருமல்ல இந்த மத எழுப்புதலினால் உந்தப்பட்டு, கிறிஸ்தவத்தை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களின் இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட மேன்மையானது என்று எண்ணிக்கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் தங்கள் இஸ்லாமின் மேன்மை நிருபிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் இந்த அழைப்பு "மரியாதைக்குரிய அழைப்பாக இருப்பதில்லை". இன்னொரு மனிதனின் மார்க்கத்திற்கு எதிராகவும், பரிசுத்த போதனைகளுக்கு எதிராகவும் ஒரு முரட்டுத்தனமாக வழிமுறையை இஸ்லாமியர்கள் பின்பற்றி தாக்குகிறார்கள், ஆனால், இது சமுதாயத்தில் வெறுப்புணர்ச்சியையும், அமைதியின்மையையுமே உண்டாக்கும். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும், அதாவது கிறிஸ்தவர்களில் சிலர் இவர்களைப் போலவே நடந்துக்கொள்கிறார்கள் என்பதாகும். கிறிஸ்துவைப்போல சிந்தை இல்லாத கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய நபியை கேலி செய்து, முஸ்லிம்களையும் அவர்களின் பாரம்பரியங்களையும் தாக்குகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. முஹம்மதுவின் காலத்திலும், கிறிஸ்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்வி கேட்டு கேலி செய்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் குறித்து குர்‍ஆன் கீழ்கண்ட வசனத்தின் மூலமாக எச்சரிக்கை விடுகின்றது:
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். . . . .. ஸூரத்துல் மாயிதா (5):51,57
முஹம்மதுவின் ஆர்வத்தையும், உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்த்த யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான எச்சரிக்கை வசனத்தை குர்‍ஆன் பதிவுசெய்துள்ளது. அதே நேரத்தில் அதே குர்‍ஆன் கிறிஸ்தவர்கள் பற்றி சில வெளிப்படையான நல்ல விஷயங்களையும் சொல்லியுள்ளது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். இந்த கிறிஸ்தவர்கள் பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்ல, இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாவார்கள், இவர்கள் கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்கள். கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களை கவனியுங்கள்.
.....நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. ஸூரத்துல் மாயிதா (5):82
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்."எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.). ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):52,53
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.ஸூரத்துல் அஸ்ஸஃப்(61):14
"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):55
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஸூரத்துல் ஹதீத்(57):27
அனேக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ இஸ்லாமியர்களின் மார்க்க‌த்தையும், அவ‌ர்க‌ள‌து ந‌பியையும் தாக்கி பேசியுள்ள‌ன‌ர், என‌வே அவ‌ர்க‌ளுக்கு ப‌திலாக‌ நீங்க‌ள் (கிறிஸ்தவர்கள்), இஸ்லாமிய‌ ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ த‌ய‌ங்காதீர்க‌ள். குர்‍ஆனின் போத‌னைகள் அனைத்தையும் நீங்கள் அங்கீக‌ரிக்க‌முடியாது, இது உண்மையாக‌ இருந்தாலும் நாம் குர்‍ஆன் சொல்வது போல முஸ்லிம்க‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் என்ப‌தை அவ‌ர்க‌ள் அறிய‌ட்டும். இயேசுக் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் "உண்மையான‌ சீட‌ர்க‌ள் நாம்" என்ப‌தை அவ‌ர்க‌ள் தெரிந்துக்கொள்ள‌ட்டும். உங்களுடைய வார்த்தைகளும், செயல்களும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நிரூபனமாக இருக்கட்டும், அதாவது ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு போல நாமும் ஒரே ஏக தேவனை வணங்குகிறோம் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். மேலும் இறைவனின் விருப்பத்திற்கு முழுவதுமாக சமர்பணம் செய்தவர்கள் நாம் என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். அன்பாக இஸ்லாமியர்களுக்கு புரியவையுங்கள், அதாவது நீங்கள் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் உரையாட தயாராக இருப்பதாகவும், இறைவனுக்கு உதவியாளராக இருக்கவும், எதிரியை வீழ்த்த ஆன்மீக வல்லமையை உடையவராக நீங்கள் இருப்பதகாவும் தெரிவியுங்கள். எல்லா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்வதாகவும், அவர்களுக்காக கடைசி வரை முழு இருதயத்தோடு உழைப்பதற்கு தயாராக இருப்பதாக கூறுங்கள். இப்படிப்பட்ட எண்ணங்களோடு நீங்கள் (கிறிஸ்தவர்கள்) வாழ்ந்தால், இஸ்லாமியர்களின் இருதய கதவுகள் நிச்சயமாக திறக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்தவர்களாக, இந்த புத்தகம் (கட்டுரைகள்) எழுதப்படுவதின் நோக்கம், இஸ்லாமியர்களை தாக்கவோ, அல்லது பதிலடி கொடுக்கவோ அல்ல என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமாகும். இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம், விவாதங்களில் ஈடுபடவோ அல்லது வாக்குவாதம் புரியவோ ஊக்குவிப்பதாக அல்லாமல், உண்மையை அறியமட்டுமே பதியப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டுகிறேன். இயேசுக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர்களாக நீங்கள் வேத வசனங்களுக்கு கீழ்படிகின்றவர்களாக இருக்கவேண்டும்.
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்....சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2:23-26
ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. தீத்து 3:2
இந்த சிறிய புத்தகம், நான் இஸ்லாமியர்களோடு தனிப்பட்ட முறையில் உரையாடிய 15 ஆண்டுகால அனுபவத்தின் மூலமாக விளைந்ததாகும். மேலும் இதர ஆசிரியர்களின் கருத்துக்களையும் படித்து நான் இதில் சேர்த்துள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய அறிஞர்களால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு இந்த கட்டுரைகள் உதவியாக இருக்கும். அதாவது கிறிஸ்தவ சமுதாயத்தில் சந்தேகங்களை உருவாக்கும் இஸ்லாமிய தாவா அறிஞர்கள் மற்றும் இதர விவாதம் புரியும் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக இருக்கும். எனினும் கிறிஸ்தவத்தை சரியாக இஸ்லாமியர்களுக்கு புரியவைக்கு ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நாம் முதலாவது கிறிஸ்தவம் சொல்வது போல வாழ்ந்து காட்டுவதாகும். முதலாவ‌து நாம் கிறிஸ்துவின் உண்மையான சீட‌ர்க‌ள் என்ப‌தை நினைவில் கொண்டு, இஸ்லாமிய‌ர்க‌ளை ச‌ந்திக்கும் ஒவ்வொரு முய‌ற்சியையும் எடுக்க‌வேண்டும். இஸ்லாமிய‌ர்க‌ளிட‌ம் ந‌ட்பாக‌ இருக்க‌வேண்டும் மேலும் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ம‌திக்க‌வேண்டும். வார்த்தைகளால் தாக்கி பேசும் வாக்குவாதங்கள், வெறும் தோல்வியை உண்டாக்கும் மேலும் நீண்ட கால மனக்கசப்பை உண்டாக்கிவிடும். ஒரு முஸ்லிம் நண்பனை உண்டாக்கி அவனுக்கு முன்னால் நாம் எந்த அளவிற்கு நேர்மையுள்ள வாழ்வை வாழ்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். மேலும், கிறிஸ்துவின் அன்பை நடைமுறையில் பிரதிபலிக்கச் செய்யவேண்டும், இப்படி செய்யும் போது கடினமான இருதயமும் உருகும் மேலும் சம்பூர்ண சத்தியம் அதில் தங்க அந்த இருதயத்தின் வாசல் திறக்கப்படும்.
இஸ்லாமியர்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் நட்புறவுடன் நடந்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இந்த சிறிய புத்தகம் பேருதவியாக இருக்கும். அதாவது உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு, நம்மிடம் கேள்வி கேட்கும் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்க இது உதவியாக இருக்கும். அனேக இஸ்லாமியர்களுக்கு தாங்கள் முன்வைக்கும் இஸ்லாமிய வாதங்கள் மற்றும் உரிமைப் பாராட்டல்கள் எல்லாம் என்னவென்றே தெரியாது, ஆகையால், அவர்களுக்கு பதில் அளிக்க இந்த சிறிய தொகுப்பு உதவியாக இருக்கும். ஒரு இஸ்லாமிய நண்பரோடு விருப்பு வெறுப்பின்றி செய்யும் உரையாடல்கள் அவரின் மனதிலே பைபிளைப் பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் உண்டாகும். இதன் பயனாக மஸியாவாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரட்சிப்பு மீது தேடல் உண்டாகி, இரட்சிக்கப்பட அது உதவியாக இருக்கும்.
இயேசுவை பின்பற்றும் உண்மை விசுவாசிகள், எந்த காலத்திலும் ஆயுதங்களை ஏந்திய போரையோ, வார்த்தைகள் ஏந்திய போரையோ செய்ய கட்டளையிடப்படவில்லை. இதற்கு பதிலாக தங்களின் இந்த உலக நோக்கங்களை தியாகம் செய்துவிட்டு, நற்செய்தியை உலகமனைத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும், அல்லது சொல்லவேண்டும். இறைவனின் ஊழியர்களாக, நம்முடைய ஒரே நோக்கம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவதாகும், நற்செய்தியை போதிப்பதாகும், மேலும் இயேசுவின் பெயரின் மூலமாக கிட்டும் பாவமன்னிப்பை பெற மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகும். கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் மீது நியாயத்தீர்ப்பை தீர்க்கக்கூடாது, பதிலாக இயேசுவின் தூதுவர்களாக நடந்துக்கொண்டு, ஒருங்கிணைப்பின் நற்செய்தியை கிறிஸ்துவின் மூலமாக பறைசாற்றவேண்டும். அதாவது மனிதன் இறைவனோடு ஒன்றுபடவேண்டும், அதே போல தேவனும் அவனோடு ஒன்றுபடுவார். இப்படிப்பட்ட‌ உன்னதமான செயல்களைச் செய்ய இறைவன் நல்லருள் புரிவாராக.
குறிப்பு: 
குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

"பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்


"பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

"இஸ்லாமின் பரிசுத்த வேதமாகிய குர்‍ஆன் வந்ததின் முக்கிய நோக்கம், யூத மற்றும் கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதத்தை தள்ளுபடி செய்யவே தான்" என்றுச் சொல்லிக்கொண்டு அனேக இஸ்லாமியர்கள் திருப்தி அடைகின்றனர். இவர்கள் இப்படி எண்ணுவதற்கு காரணம், "பைபிள் திருத்தப்பட்டு விட்டது அல்லது பைபிளின் போதனை காலம் கடந்துவிட்டது அல்லது உண்மையான பைபிள் தொலைந்துவிட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புவதாகும். ஆனால், இஸ்லாமியர்கள் கருதுவது போல் குர்‍ஆன் சொல்வதில்லை. இதற்கு பதிலாக, முந்தைய வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தவே குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று குர்‍ஆன் கூறுகிறது. இங்கு ஒரு விஷ‌ய‌த்தை புரிந்துக்கொள்ள‌வேண்டும், அதாவ‌து குர்-ஆன் ஒரு காரியத்தை உறுதிப்படுத்த வருமானால், அந்த காரியம் அதி முக்கியமானதாகத் தானே இருக்கவேண்டும். அதாவது இறைவனே உறுதிப்படுத்துகின்றான் என்றுச் சொன்னால், அது முக்கியமில்லாத ஒன்றாக இருக்குமா? நிச்சயமாக இல்லை.
இப்போது கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். இந்த வசனங்களின் படி, பைபிளை மாற்றவோ, தள்ளுபடி செய்யவோ அல்லாமல், பைபிளை உறுதிப்படுத்தவே குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்கிறது.
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது ..... ஸூரத்துல் பகரா(2):41
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள்.... ஸூரத்துல் பகரா(2):89
......அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ஸூரத்துல் பகரா(2):91
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது.... ஸூரத்துல் பகரா(2):101
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. ஸூரத்துல் அஹ்காஃப்(46):12
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம் ; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். ஸூரத்துல் அன்ஆம்(6):92
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது . ஸூரத்துல் மாயிதா(5):48
முந்தைய வேதங்களில் அப்படி என்ன முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது? முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் தாம் வந்துள்ளதாக ஏன் குர்‍ஆன் சொல்லவேண்டும்? இந்த கேள்விகளுக்கு குர்‍ஆனே பதில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்கிறது, "மனித குலத்திற்கு வழிகாட்டவும், சீர்திருத்தவும், ஞானம் புகட்டவும், அருளாகவும் முந்தைய வேதங்கள் அனுப்பப்பட்டது". மேலும், மனித குலத்திற்கு ஒளியாக வேதங்கள் அனுப்பப்பட்டது என்று கூறுகிறது, இந்த ஒளி மட்டும் தான் மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, தண்டனையிலிருந்து தப்பவைத்து மனிதனுக்கு இரட்சிப்பை தந்து நித்திய வாழ்வை அளிக்கிறது. இதோ குர்‍ஆன் சொல்லும் சாட்சியத்தை நீங்களே படியுங்கள்.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் . ஸூரத்துல்ஆல இம்ரான்(3):3
நிச்சயமாக நாம் தாம் "தவ்ராத்"தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):44
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):46
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).ஸூரத்துல் கஸஸ்(28):43
மேலே முந்தைய வெளிப்பாடுகள் என்று சொல்லப்பட்டவைகள் பைபிளைக் குறிக்கும் என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும். அவைகள் இறைவனிடமிருந்து வந்த ஆயத்துக்கள் (அடையாளங்கள்), அவைகளை நம்பவேண்டும். இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், குர்‍ஆன் தெளிவாக கீழ்கண்ட வசனங்களை சொல்லியுள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் கவனிக்கவேண்டும்.
ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான். ஸூரத்துல்ஆல இம்ரான்(3):4
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள் ஸூரத்துல் முஃமின்(40):70-72
ஆங்கில மூலம்: The Claim that the Qur'an Came to Replace the Bible

"பைபிள் மாற்றப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்


"பைபிள் மாற்றப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசுத்த எழுத்துக்களாகிய யூத மற்றும் கிறிஸ்தவ வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் குர்-ஆன் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தவில்லை. குர்-ஆன் வேதங்களுடையவர்களை குற்றப்படுத்துவதெல்லாம் "தஹரிஃப் (taharif)" என்பது பற்றியதாகும். அதாவது தங்கள் நாவுகளால் வேத எழுத்துக்களின் பொருளை மாற்றி அல்லது மறைத்து கூறுவதாகும். 
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் -. . . . ஸூரதுல் ஆலஇம்ரான் (3):78
வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று வாதிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது என்னவென்றால், வேதம் மாற்றப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது? என்ற ஆதாரத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும், அப்போது தான் எந்த வசனங்கள் மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்பிடமுடியும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் பொதுவான பதில் என்னவென்றால், "பர்னபாஸ் சுவிசேஷம்" ஆகும்.  எனினும் "பர்னபாஸ் சுவிசேஷம்" இஸ்லாமியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால், குர்-ஆனுக்கு  முரண்படும் அனேக விஷயங்கள் இந்த பர்னபாஸ் சுவிசேஷ நூலில் இருப்பது தான். பைபிளின் பழைய மூல பிரதிகளில் சில எழுத்து வித்தியாசங்கள் இருந்தாலும், அவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல, மேலும் அவைகள் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை.  மூல கைப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்கள் குர்-ஆனுக்கும் உண்டு. இதைப் பற்றி யூசுப் அலி அவர்கள் "குர்-ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1977), 36வது பக்கத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்:
மேற்கண்ட சரித்திர விவரங்களின் படி, குர்-ஆன் பல வகைகளில் (வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு – variations) ஓதப்பட்டு இருப்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது.  இந்த விதமாகத் தான் நம் பரிசுத்த இறைத்தூதரும் ஓதினார் மற்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் குர்-ஆனை ஓதும் குர்ரா(Qurra) என்ற இஸ்லாமிய அறிஞர்களும், கீழ்கண்ட வகையில் ஒத்துப்போகிற "ஓதும் முறை" தான் சரியானது என்று ஒட்டுமொத்தமாக சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்துள்ளனர். அதாவது a) குர்-ஆன் ஹஜ்ரத் உஸ்மான் அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் பிரதியில் உள்ளது போல ஓதப்படவேண்டும் b) அரபி மொழியின் இலக்கணம் மற்றும் அகராதியின்படி ஓதப்படவேண்டும் c) மூன்றாவதாக எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஓதும் முறையானது சரியான சங்கிலித்தொடருடன், பரிசுத்த இறைத்தூதர் வரை செல்லக்கூடிய ஆதாரப் பூர்வமானதாக இருக்கவேண்டும்.  இதனால் சில வழிமுறைகளில்(Few Variations) குர்-ஆன் ஓதும் முறை உள்ளது, மேலும் முரண்பாடு இல்லாமல், குர்-ஆன் வசனங்களின் பொருள் இன்னும் மேருகேரும் வகையில் இருக்கிறது. இன்று நம்மத்தியில் நிலவும் பல வகையான குர்-ஆன் ஓதும் முறையில் தான் இறைத்தூதர் அவர்களும் ஓதினார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி ஓதுவதினால் வசனங்களின் பொருள் சொறிவும் அதிகமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு: இரண்டு அதிகார பூர்வமான ஓதும் முறை எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம். அ) அல்பாத்திஹா அத்தியாயத்தின் மூன்றாம் வசனம். ஆ) அல்மாயிதா அத்தியாயத்தின் ஆறாம் வசனம். 
முதலாவது வகை குர்-ஆன் ஓதும் முறையில், குர்-ஆன் 1:3ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் எஜமானன்" என்று உள்ளது, இன்னொரு வகை குர்-ஆன் ஓதும் முறையில், அந்த வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி" என்று உள்ளது.  இந்த இரண்டு வகையான ஓதும் முறையில் இவ்வசனத்தை படிக்கும் போது, அர்த்தம் இன்னும் தெளிவாக புரிகிறது. 
மேலும், குர்-ஆன் 5:6ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் பொருள்"உங்கள் முகத்தையும்… உங்கள் கால்களையும் கழுவுங்கள்" என்பதாகும். அதாவது வெறுங்கால்களுடன் உலூ செய்வதாகும். இதே வசனத்தை வேறு ஒரு வகையான குர்-ஆன் ஓதும் முறையில் கவனித்தால், "உங்கள் முகங்களை கழுவுங்கள், ஈரமாக கரங்களால் உங்கள் தலையை துடையுங்கள் மற்றும் கால்களையும் துடையுங்கள்" என்ற பொருள் வருகிறது.
Reproduction from Yusuf Ali's "The Holy Qur'an Translation and Commentary," 2nd Edition, 1977
மேலே குர்-ஆனில் காண்பது போலவே, பைபிளிலும் மாற்றங்கள் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கேள்வி 1 . . . யார் பரிசுத்த எழுத்துக்களை மாற்றியது?
இஸ்லாம் பரவுவதை தடுக்க யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பரிசுத்த வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.  ஆனால், உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள் அனேக வித்தியாச கண்ணோட்டங்கள் கொண்ட மக்களாக இருக்கிறார்கள்.
யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) . . ..  (ஸூரதுல் பகரா 2:113)
அடிப்படை சத்தியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்திருக்குமானால், இதற்கு கடும் எதிர்ப்பு உண்டாகி இருந்திருக்கும், ஏனென்றால் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அனேக பிரிவுகள் இருக்கிறது, ஆகையால் இவர்கள் மாற்றங்களை அங்கீகரித்து இருக்கமாட்டார்கள். சபை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேத வார்த்தைகளை மாற்றப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழும்பினதில்லை. ஆனால், வசனங்களுக்கு பல வகையாக வியாக்கீனம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இயேசு கூட யூதர்கள் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லை, அதற்கு பதிலாக வேத வசனங்களின் உண்மை அர்த்தத்திற்கு திரும்புங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். யூதர்கள் வேத எழுத்துக்களை மாற்றி இருந்திருந்தால், அவர்களின் அந்த குற்றத்தை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருப்பார்.
முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த மற்றும் முஸ்லிம்களோடு நல்ல நட்புறவுடன் இருந்த உண்மையான கிறிஸ்தவர்கள் (அபிசீனியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்), இப்படிப்பட்ட ஏதாவது மாற்றங்கள் யூதர்களால் வேதத்தில் செய்யப்பட்டு இருந்திருந்தால் அதனை இவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்.
 . . .. "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.  (ஸூரதுல் மாயிதா 5:82)
 கேள்வி 2: எப்போது வேதம் மாற்றப்பட்டு இருக்கலாம்?
ஒருவேளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து முஹம்மதுவின் மரணத்திற்கு முன்பு தங்கள் வேதங்களை மாற்றியிருந்திருந்தால், நிச்சயமாக கீழ்கண்ட வசனங்களை இறக்கி,  இறைவன் முஹம்மதுவிற்கு அறிவுரை கூறியிருக்கமாட்டான்.
. . . ; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; …" என்றும் கூறுவீராக.  ( ஸூரதுல் அஷ்ஷூரா (42):15)
 (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்,அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.   ( ஸூரதுல் பகரா 2:136)
"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. ….  (ஸூரதுல் அல் மாயிதா (5):68)
 (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. ....  (ஸூரதுல் அல் மாயிதா (5):47)
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (ஸூரதுல் அல் மாயிதா (5):46)
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக …..  (ஸூரா யூனுஸ் (10):94)
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. …  …, "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ….  அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, ….  (2:89, 91, 101)
மெய்ப்பிக்கும்படியாக" என்ற சொற்றொடரை கவனிக்கவும்.  இந்த வசனங்கள் அனைத்தும் சொல்லும் குர்-ஆனின் தெளிவான போதனை என்னவென்றால், "முந்தைய வேதங்களைக் மெய்ப்பிக்க குர்-ஆன் இறக்கப்பட்டதாகும்". அதாவது முஸ்லிம்கள் கருதுவதுபோல, முந்தைய வேதங்களை சரிப்படுத்தவோ, அல்லது தள்ளுபடி செய்யவோ குர்-ஆன் வரவில்லை என்பதாகும். குர்-ஆனில் எந்த ஒரு இடத்திலும், "திருத்தப்பட்ட முந்தைய வேதங்களிலிருந்து, தொலைந்துவிட்ட முந்தைய வேதங்களிலிருந்து மக்களை காக்கவே குர்-ஆன் இறக்கப்பட்டது" என்று கூறவில்லை. அதாவது தௌராத் மற்றும் இஞ்சில் திருத்தப்பட்டது அவைகளிலிருந்து காக்க குர்-ஆன் வந்தது என்று எந்த ஒரு வசனத்தையும் குர்-ஆனில் காட்டமுடியாது.
பரிசுத்த வேதமானவது, முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுவதும் சாத்தியமில்லாதது என்பதை கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.
கி.பி. 600 காலகட்ட வரையிலும், கிறிஸ்தவமானது ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவிவிட்டது. உலக அளவில், இந்த மூன்று கட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், பரிசுத்த வேதத்தை மாற்றுவதற்கு ஒரு குழுவாக ஒரு இடத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் உலகில் இல்லை.
முஸ்லிம்கள் பரிசுத்த வேதங்களை மதிக்கிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களும் தங்களிடம் இருந்த முந்தைய வேதங்களை அப்படியே பாதுகாத்து தங்களிடம் வைத்திருந்திருப்பார்கள். எனினும், இந்த இஸ்லாமியர்கள் பாதுகாத்த வேதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 
கி.பி. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்னும் நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது (முஹம்மது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்). இந்த கையெழுத்துப் பிரதிகள் தற்கால மொழியாக்கங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவைகள் தற்கால வேதத்தோடு ஒத்து இருப்பதை காணமுடிகிறது.
கேள்வி 3: வேதங்கள் எப்படி மாற்றப்பட்டது?
யூத மார்க்கவும், கிறிஸ்தவ மார்க்கவும் உலகம் முழுவதும் பரவியிருப்பதினால்,  இவ்விரு பிரிவினரிடம் உள்ள அனைத்து வேதங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், இதர எழுத்துக்களையும், வேத மேற்கோள்கள் காட்டப்பட்ட மூல ஆவணங்களையும் சேகரிப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளில், யூத சினகாக் ஆலயங்களில், நூலகங்களில் பள்ளிகளில் மேலும் வீடுகளில் உள்ள அனைத்து வேதங்களையும், ஆவணங்களையும் சேகரித்து அவைகளில் மாற்றம் செய்துவிட்டு, உலகில் யாருக்குமே தெரியாமல் அவைகள் இருந்த இடங்களிலேயே மறுபடியும் அவைகளை  திருப்பி வைப்பது என்பது நிச்சயமாக செய்ய முடியாத ஒரு செயலாகும். 
குர்-ஆன் கூட இறைவனின் வார்த்தையை மாற்றமுடியாது என்று கூறுகிறது:
மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - . . . .  (ஸூரதுல் அன்ஆம் (6):115)
. . .; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - . . .  (ஸூரதுல் யூனுஸ் (10):64)
ஒரு வேளை மேற்கண்ட வசனங்களை கண்டு, 'அல்லாஹ் எங்கள் குர்-ஆனை திருத்தப்படுதலிலிருந்து காக்க வல்லவர்" என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அதே சர்வ வல்ல இறைவன் தன்னுடைய முந்தைய வேதங்களையும் காக்க வல்லவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்

"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்


"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
முஹம்மதுவின் பெயர் ஒரு முறை கூட பைபிளில் காணப்படவில்லை என்பதால் அனேக இஸ்லாமியர்கள் பைபிளை குற்றப்படுத்துகிறார்கள். யூத மற்ற கிறிஸ்தவர்களின் வேதங்களில் முஹம்மதுவின் பெயர் காணப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படி இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம்  குர்-ஆனில் காணப்படும் இரண்டு வசனங்களாகும்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்குமுன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (குர்-ஆன் 61:6)
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; ….(குர்-ஆன் 7:157)
இஸ்லாமியர்களில் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், ஆய்வு மூலமாக, முஹம்மதுவிற்கு பின்பு உள்ள பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும், முஹம்மதுவிற்கு முன்பு இருந்த பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன என்பதை அறிவார்கள்.  ஆகையால், முஹம்மதுவின் பெயரை பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்றாகும்.  எனினும், முஹம்மதுவின் பெயர் பைபிளில் காணப்படவில்லையானாலும்,  பைபிளில் காணப்படும் சில வசன்ங்கள் முஹம்மதுவை குறிக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகவே, யூத கிறிஸ்தவர்களையும் சேர்த்து, உலகமனைத்திற்கும் முஹம்மது நபியாக வந்தார் மற்றும் ஊழியம் செய்தார் என்பது இதன் மூலம் நிருபிக்கப்படுகிறது என்று வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வாதங்களினால், முடிந்தவரை முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படி செய்யலாம் என்றும் மேலும் முஹம்மது உருவாக்கிய மார்க்கமாகிய் இஸ்லாம் ஒருமுழுமை அடைந்த மதம் என்று கிறிஸ்தவர்கள் கருதுவார்கள் என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்.
மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசு  கூறியதாக இப்படி சொல்கிறது: "எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்". இதனை படித்த அனேக இஸ்லாமியர்கள் பைபிளை முழுவதுமாக தேடிப்பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த வசனமும் தென்படவில்லை. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பற்றி புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷத்தின்  சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இவைகள் தான் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், யோஆவன் 14:16, 15:26 மற்றும் 16:7 வசனங்களை கூறலாம். மூல கிரேக்க மொழியில் "பராக்லெடோஸ் (paracletos)" என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழியாக்கங்களில் "தேற்றரவாளன்", "அறிவுறுத்துகிறவர்" (அ) நமக்கு பதிலாக பேசுகிறவர் (வழக்கறிஞர்) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழில் "தேற்றரவாளன்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள், "கிரேக்க வார்த்தை ஆரம்பத்திலிருந்து தவறாக எழுதப்பட்டுள்ளது, அதாவது சரியான வார்த்தை "பெரிக்லோடஸ்" ஆகும், இவ்வார்த்தையின் நெருங்கிய அர்த்தம் "அஹமத்" என்பதாகும், அதாவது "போற்றுதலுக்கு உரியவர்"  என்பதாகும். 
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது "அஹமத்" மற்றும் "முஹம்மத்" என்ற வார்த்தைகள் இரண்டும் வித்தியாசமானவைகள்.  முஹம்மத் என்பது ஒரு தனிப்பெயராகும் இதன் அர்த்தம் "போற்றுதலுக்குரிய ஒருவர் (the one who is praiseworthy)" என்பதாகும். ஆனால், "அஹமத்" என்பது ஒரு உரிச்சொல் ஆகும், இதன் அர்த்தம் "போற்றுதலுக்கு தகுதியானவர் – (worthy of praise)" என்பதாகும்.  மேலும் அஹமத் என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு வேறு யாருக்கும் சூட்டப்படவில்லை என்று தெரிகின்றது. இதனால் தான் முழு குர்-ஆனிலும் இஸ்லாமிய நபியை குறிப்பிடும் போது, "அஹமத்" என்று குறிப்பிடவில்லை. இதற்கு பதிலாக "முஹம்மது" என்ற தனிப்பெயரையே  நாம் குர்-ஆனில் குறிப்பிட்டு இருப்பதைக் காணலாம்.
புதிய ஏற்பாட்டின் யோவான் சுவிசேஷத்தின் வசனத்தைக் குறித்து கவனித்தால், இந்த வசனத்திற்கு அடுத்து வரும் வசனங்களில் அந்த "பராக்லேடோஸ் (தேற்றரவாளர், பரிந்து பேசுபவர், அறிவுறுத்துபவர்)" என்பவர்,"சத்தியத்தின் ஆவியானவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சத்திய ஆவியானவரை உலகம் காணமுடியாது, ஏனென்றால் அவர் விசுவாசிகளின் உள்ளங்களில் வாழுபவர் மேலும் அவர் இயேசுக் குறித்து சாட்சி சொல்லுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.  தம்முடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது குறிப்பிட்டதும் இந்த சத்திய ஆவியானவரைப் பற்றித் தான், முஹம்மதுவைப் பற்றி அல்ல.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.  (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8)
இயேசுவின் மரணத்திற்கு 50 நாட்களுக்கு பின்பு, இந்த பரிசுத்த ஆவியானவர் பற்றிய வாக்குறுதி சீடர்களின் வாழ்வில் நிறைவேறியது. மேலும் பெந்தேகோஸ்தே என்ற நாளில் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாக அது நடைப்பெற்றது. இந்த மிகப்பெரிய நிகழ்ச்சிப் பற்றி, பேதுரு என்று இயேசுவால் பெயர் சூட்டப்பட்ட சீடர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.  அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 2:32-33)
மேற்கண்ட விவரங்கள் மூலமாக அறிவது என்னவென்றால், "பராக்லெடோஸ்" என்ற வார்த்தையானது தேவனின் ஆவியானவரை குறிப்பிடுகின்றதே தவிர, ஒரு மனிதனை அது குறிப்பிடவில்லை. மேலும், இந்த "பாரக்லேடோஸ்" என்பவர், பிதாவிடமிருந்து சீடர்களுக்கு கொடுக்கப்படுகிறார். எனவே, சீடர்களின் வாழ்நாளிலேயே அவர் வந்தாகவேண்டும். இயேசுவின் சீடர்கள் மரித்து 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் முஹம்மது வருகிறார், இப்படி இருக்கும் போது, "பாரக்லேடோஸ்" என்பவர் எப்படி முஹம்மதுவாக இருக்கமுடியும்?
முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டையும் தேடிப்பார்த்துள்ளனர், முக்கியமாக தோராவில் முஹம்மது பற்றி ஏதாவது வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்துள்ளனர். இதன் பயனாக அவர்கள் இரண்டு பழைய ஏற்பாட்டு வசனங்களை பொதுவாக மேற்கோள் காட்டுவார்கள், அவைகள் உபாகமம் 18:15 மற்றும் 18ம் வசனங்கள் ஆகும்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.  உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:15,18)
மோசேயைப் போல வெளிப்பட அந்த தீர்க்கதரிசி, முஹம்மது தான் என்று அனேக இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த தலைப்பு பற்றி அடுத்த கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.

மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்" என்ற இஸ்லாமியர்களின் வாதம்


"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்"  என்ற இஸ்லாமியர்களின் வாதம்
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:18)
மேற்கண்ட வசனம் பற்றி அனேக இஸ்லாமியர்கள் இவ்விதமாக வாதிக்கிறார்கள், அதாவது தேவன் ஈசாக்கின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் மக்களிடம் பேசுகிறார், அவர்களிடம் "அவர்கள் சகோதரரிலிருந்து" என்று கூறுகிறார். இதன் அர்த்தம் இஸ்மவேல் சந்ததியிலிருந்து என்பதாகும், இஸ்மவேல் ஈசாக்கின் சகோதரராக  இருக்கிறார். எனவே, மோசேயைப் போல ஒரு நபியை எழுப்புவேன் என்று தேவன் சொன்னது முஹம்மதுவை குறிக்கும். மேலும் முஹம்மதுவே இஸ்மவேல் சந்ததியில் எழும்பிய மிகப்பெரிய நபியாவார். இவர் அற்புதங்கள் செய்து, இறைவனின் சட்டத்தை நிலை நிறுத்தினார்.  இப்படியாக முஸ்லிம்களில் அனேகர் வாதிக்கின்றனர்.
முதலாவது நாம், "அவர்கள் சகோதரரிலிருந்து" என்ற சொற்றொடரைப் பற்றி ஆராய்வோம். இந்த சொற்றொடரை சரியாக புரிந்துக்கொள்ள, இதே போல வேறு இடத்தில் தேவன் சொன்ன வார்த்தைகளை கவனிக்கவேண்டும். அதாவது இதே இஸ்ரவேல் மக்களை நோக்கி "ஒரு ராஜாவை எப்படி நியமிக்கலாம்" என்பதைப் பற்றி தேவன் கட்டளை கொடுக்கிறார். இதனை நாம் அதே உபாகமம் 17:14-15ம் வசனங்களை கவனித்தால் புரியும்:
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்;உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. (உபாகமம் 17:14-15)
நிச்சயமாக, பழங்கால மத்திய கிழக்கு நாட்டு பழக்கத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை இஸ்மவேல் வம்சத்திலிருந்து ஏற்படுத்தமாட்டார்கள் என்று முஸ்லிம்களுக்கு சரியாக தெரிந்திருக்காது.  மேலும் "உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே" என்ற சொற்றொடரானது தெளிவாக சொல்வது போல, அவன் ஒரு இஸ்ரவேல் வம்சத்தானாகவே இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, முஹம்மதுவை மோசேவோடு ஒப்பிடுவதற்கு முன்பாக உபாகமம் 34:10-12ம் வசனங்களை நாம் படிக்கவேண்டும். இவ்வசனங்கள் மோசேயைப் பற்றிய ஒரு சுருக்க குணங்களை தெரிவிக்கிறது, அதே போல, இவரைப்போல வருபவரின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்ட்து என்றும் இது தெளிவாக்குகிறது.
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம் 34:10-12)
பரிசுத்த வேத எழுத்துக்களின் மூலம் நாம் அறிவதாவது,
1) மோசே ஒரு இஸ்ரவேலராக இருந்தார்
2) தேவனால் அவர் அறியப்பட்டு இருந்தார் அதாவது, தேவனை முகமுகமாய் அறிந்தவர், இதன் அர்த்தம் என்னவென்றால், மறைமுகமாக அல்லது இன்னொரு இடைத்தரகர் மூலமாக அல்லாமல் தேவன் நேரடியாக இவரோடு  பேசுபவராக இருந்தார்.
3) மோசே மிகப்பெரிய அற்புதங்களைச் செய்தார்.
ஆனால், உபாகமத்தில் சொல்லப்பட்ட முன்னறிவிப்பு முஹம்மதுவில் நிறைவேறியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  கிறிஸ்தவர்களோ, மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி என்பவர் மேசியாவாகிய இயேசு என்று நம்புகிறார்கள், மேலும் கீழ்கண்ட ஒப்பிட்டு பட்டியலின் படி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதேயாகும்.
மோசே
இயேசு
முஹம்மது
இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார்
இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார். (யூதாவின் வம்சத்தில் வந்தவர் – மத்தேயு 1:3, லூக்கா 3:33)
அரபியர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசி (இவர் ஒரு நபி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்)
(ஸூரா 32:3, 36:6, 34:43-44)
தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (ஸூரா 4:164, யாத்திராகம்ம் 33:11)
தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (யோவான் 12:49-50, 4:10)
நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிப்பாடுகளை காபிரியேல் தூதன் மூலம் பெற்றவர் (ஸூரா 2:97)
அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 2:50 – கடல், ஸூரா 2:57 – மன்னா)

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 3:49, மத்தேயு 8:27 – கடல், யோவான் 6:11-14 -மன்னா)
எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் (ஸூரா 6:37, ஸூரா 28:48)
மேற்கண்ட விவரங்கள் போக, புதிய ஏற்பாடு, உபாகமத்தில் 18:18ன் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசுவில் நிறைவேறியது என்று கூறுகிறது. படிக்க அப்போஸ்தலர் நடபடிகள் 3:17-26. மேலும் 22ம் வசனத்தை கவனிக்கவும் : 
 "மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக"
முடிவுரையாக, குர்-ஆன் 28:48 சொல்வதை சிறிது கூர்ந்து கவனிக்கவும்:
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்;.  (குர்-ஆன் 28:48)
மேற்கண்ட குர்-ஆன் வசனத்தின் படியும், முஹம்மது மோசேக்கு சமமான தீர்க்கதரிசி அல்ல என்பது தெளிவாக புரியும்.