Monday, July 30, 2012

ரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா?

அன்புள்ள தம்பிக்கு

உன்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

நீ எழுதிய கடிதத்திற்காகவும், கேள்விக்காகவும் மிக்க நன்றி.

உன் கடிதத்தில் நீ கீழ்கண்ட குற்றச்சாட்டை வைத்தாய்:

“தீர்க்கதரிசிகள் பாவம் செய்தார்கள் என்று பைபிள் சித்தரிக்கிறது, நபிகள் பாவம் செய்வார்களா? தாவீது பாவம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. முஹம்மது பாவம் செய்யாத ஒரு மேன்மையான மனிதராக இருக்கிறார் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பைபிள் நபிகளை குற்றப்படுத்துகிறது. இது தவறல்லவா?”

இன்று நான் 2 சாமுவேல் புத்தகத்தில் 11ம் 12ம் அதிகாரங்களை வாசித்தேன். உடனே உன் கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது. இறைவேதத்தில் உனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றான தாவீது ராஜாவின் (தாவூத் நபி) சம்பவம் அங்கேயிருந்தது. உன் சிறுவயது முதல் நீ நேசித்த கதாபாத்திரம் இந்த தாவீது. இன்றும் உனக்கு 23ம் சங்கீதமும், தாவீது கோலியாத் நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நீ இப்போது முஹம்மதுவை நேசிக்கிறாய். அது உன்னுடைய சுதந்திரம். ஆனால் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உனக்காக இந்த கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறேன். உன்னுடைய கேள்விக்கும் இது பதிலாக அமையும். முடிவை உன்னுடைய சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

ஒரு நாள் தாவீது ராஜா, தனது படைகளை யோவாபின் தலைமையில் யுத்தத்துக்கு அனுப்பிவிட்டு அரண்மனையில் இருக்கிறான். மொட்டை மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு அழகிய பெண் குளித்துக்கொண்டிருப்பதை காண்கிறான். அவள் அழகில் மயங்கிய ராஜா அவளை பற்றி விசாரித்து சொல்லுமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிடுகிறான். அவள் உரியாவின் மனைவி என்று ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. தாவீது ராஜா அவளை வரவழைத்து அவளுடன் உடலுறவு கொள்கிறான். மீண்டும் அவளை அவள் வீட்டிற்கே அனுப்பி விடுகிறான். இந்த உரியா தன் இராணுவத்தில் வேலை செய்யும் தேச பக்தியுள்ள ஒரு போர் சேவகனாக இருக்கிறான். மேலும் ஒரு சதி செய்து, உரியா போரில் கொல்லப்பட திட்டம் தீட்டுகிறான். ராஜாவின் திட்டப்படியே உரியா மரணிக்கிறான். ஹித்தா (துக்க) காலம் முடிந்தவுடன் உரியாவின் மனைவியாகிய பெத்சேபாலை அழைத்து ராஜா திருமணம் செய்துகொள்கிறான். இந்த பாவத்திற்கு தேவன் தண்டனை கொடுத்தார்.

தம்பி, இந்த நிகழ்ச்சி போதிக்கும் சில படிப்பினைகளை முதலில் உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  • ஒரு இராஜாவின் கடமை போர்காலத்தில் போருக்கு செல்வதாகும். தாவீது தனது கடமையை தவறினான்.
  • அந்த காலத்தில் ஒரு ராஜா விரும்பினால் எத்தனை திருமணங்களையும் செய்யலாம். ஒரு பெண், இன்னொருவனின் மனைவியென்று அறிந்தும் அவளை அழைத்து உடலுறவு கொண்டான்.
  • ராஜா திட்டமிட்டு அவள் கணவரை கொன்றான்.
தம்பி, நாங்கள் செய்யும் பாவங்களை அறியாமல் செய்தோம் என்று சாக்குபோக்கு சொல்லமுடியாது. இறைவன் தீமைகளால் எம்மை சோதிக்கிறவரல்ல என்று இறைவேதம் சொல்கிறது. இங்கு தாவீது ராஜா எல்லாம் தெரிந்தும் தனது இச்சைக்கு கீழ்படிந்தான் என்பது புலனாகின்றது.

சரி தம்பி, இப்பொழுது நீ உயிரிலும் மேலாய் நேசிக்கும் முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

முஹம்மதுவின் (வளர்ப்பு) மகன் தன் தகப்பனிடம் வந்து “நான் என் மனைவியை விவாகரத்து செய்ய போகிறேன், நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறான், இதனை குர்-ஆன் 33:37ல் காணலாம். அந்த வசனத்தை ஒரு முறை படிப்போமா?
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)
எந்த ஒரு மகனாவது தன் தந்தையிடம் வந்து, நான் என் மனைவியை விவாகரத்து செய்கிறேன், அதன் பிறகு நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று ஒரு காரணமும் இல்லாமல் சொல்லமுடியுமா? கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்தால், அவளை விவாரகரத்து செய்ய விரும்பினால், இது சாதாரணமான விஷயம் தான், ஆனால், நீங்களே அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று தன் தந்தையிடம் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? இதில் ஏதோ மர்மம் அடங்கியிருக்கிறது.

இஸ்லாமிய சரித்திர ஆசிரியரான அல் தபரியின் கூற்றுப்படி, முஹம்மது ஒரு முறை தனது வளர்ப்பு மகனாகிய ஜையத் வீட்டிற்கு சென்றபோது, அப்போது ஜையத் அங்கு இல்லை, அவனது மனைவி ஜைனப் (மருமகள்) மட்டுமே இருந்தாள். நீங்க என் அப்பா அம்மாவை விட அன்பானவர், எனவே உள்ளே வாருங்கள் என்று மருமகள் அழைக்கிறாள். அவர் உள்ளே செல்லவில்லை, ஆனால், அந்த சமயத்தில் ஜைனப் இருந்த நிலையைக் கண்டு (அறைகுறை ஆடை) அந்த ஜைனப்பின் அழகில் மயங்கியவராக முஹம்மது திரும்பி வந்துவிடுகிறார், அப்படி வரும் போது, “உள்ளங்களை மாற்றுகின்ற இறைவனுக்கு நன்றி (Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!")” என்று சொல்லிக்கொண்டு வந்துவிடுகிறார்.

கணவன் வந்தவுடன் “முஹம்மது வந்து அவரை கேட்டவிஷயத்தையும், போகும் போது, மேற்கண்ட விதத்தில் அவர் முனுமுனுத்துக்கொண்டு சென்றதையும், ஜைனப் அறிவிக்கிறாள்”. அப்பொது தன் மனைவியை முஹம்மது விரும்புகிறார் என்பதை அறிந்த முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜையத் (இவன் மகன் அல்ல மகான்), முஹம்மதுவிடம் சென்று, நான் விவாகரத்து செய்கிறேன், நீர் அவளை திருமணம் செய்துக்கொள்ளும் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் முஹம்மது மறுக்கிறார். ஆனால், அல்லாஹ் வசனத்தை வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு பயந்து உன் உள்ளத்தில் இருந்த ஆசையை வெளியே சொல்ல தயங்கினாய், இதோ விவாகரத்து முடிந்தவுடன், உனக்கு அவளை நான் மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான் (குர்-ஆன் 33:37). (பார்க்க : http://www.answering-islam.org/Shamoun/zaynab.htm)

தனது மருமகள் விதவையாக தத்தளிக்க கூடாது எனும் எண்ணத்தில் முஹம்மது அவளை திருமணம் செய்தார். இது உலகத்தார் அனைவருக்கும் முன்மாதிரியாக செய்துகாட்டினார்கள் என்று உனது இஸ்லாமிய நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் இதுவல்ல உண்மை காரணம்.


உன் சிந்திக்கும் திறனை நீ இன்னும் இழக்கவில்லையென்று நினைக்கிறேன். அப்படியானால் சிந்தித்துபார். இறைவேதமோ நாங்களோ தாவீது செய்ததை நியாயப்படுத்தவில்லை. அவன் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்கிறோம். ஆனால் முஹம்மது செய்த இந்த இழிவான செயலை இஸ்லாமியர் எப்படி பரிசுத்தமாக பார்க்கிறார்கள் என்று சிந்தித்து பார். மத்தேயு 5:27,28ம் வசனங்களின் படி, முஹம்மது உள்ளத்திலும் பாவம் செய்துள்ளார், அதனை செயலிலும் செய்து காட்டினார்.

இறைவேதத்தின் கதாநாயகன் இறைவன் மட்டுமே! ஆகவே மற்றவர்களின் நன்மை தீமை இரண்டையும் எமது படிப்பினைக்காக இறைவேதத்தில் இறைவன் உள்ளடக்கியிருக்கிறான். ஆனால் இஸ்லாம் முஹம்மது செய்த எல்லா பாவங்களுக்கும் நியாயம் கற்பிப்பதாகவேயிருக்கிறது. உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். முஹம்மதுவின் கையிலே அல்லாஹ் பொம்மையாக இருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தாவீது ராஜா செய்த பாவத்தை இறைவன் உணர்த்தி, தண்டனையும் கொடுத்து, மனந்திரும்பியவுடன் மீண்டும் இறைவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாக மாறுகிறான். இது தான் இறைவன் வகுத்த வழி முறை. பாவம் உணர்த்தப்படும். தண்டனையை அனுபவிக்கவேண்டும். மனந்திரும்பியவுடன் இறைவன் மன்னித்துவிடுவான். மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும்.

முஹம்மது நபி செய்த பாவத்தை சற்று சிந்தித்து பார் எனதன்பு தம்பி. அவர் தன்னை நியாயப்படுத்துவது மட்டுமல்ல. அல்லாஹ்வும் அவர் செய்தது சரியென்று சான்றிதழ் கொடுக்கிறான். மல்கியா 2:13-16ன் படி கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார், ஆனால்,குர்-ஆன் 33:37ம் படி அல்லாஹ்வே அந்த விவாகரத்தை நிறைவேற்றுகிறார். இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒரு பெண் இன்னொருவனின் மனைவியாக இருக்கும் நிலையிலேயே, அவளை பிரித்து மற்றொருவனுக்கு தந்தேன் என்று அல்லாஹ் சொல்வது தான். இதிலிருந்து இந்த அல்லாஹ் எப்படிபட்டவன் என்பது உனக்கு புரிந்திருக்கும். பெண்கள் விஷயத்தில் சிறப்பு சலுகைகள் முஹம்மதுவுக்கு மட்டும் கொடுத்திருப்பதையும் குர்ஆனில் காணலாம். இதை குறித்து நான் மேலும் தெளிவுபடுத்த தேவையில்லையென்று நினைக்கிறேன். முஹம்மதுவின் வாழ்க்கையையும் தாவீதின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்து இருவரில் யார் சிறந்தவர் என்பதை நீயே முடிவு செய்துகொள்.

தான் செய்தது பாவம் என்பதை உணர்ந்து மனந்திரும்பியவர் சிறந்தவரா? அல்லது தான் செய்த பாவத்துக்கு நியாயம் கற்பித்து, அதிலிருந்து மனந்திரும்பாமல் இருந்தவர் சிறந்தவரா?

தன் அடியான் செய்த பாவத்தை உணர்த்தி தண்டனை கொடுத்து அவன் மனந்திருந்தியவுடன் பழையபடி அவனை நேசித்த இறைவன் சிறந்தவரா? தன் அடியான் செய்யும் பாவங்களையெல்லாம் நியாயப்படுத்தி வானத்திலிருந்து ”வஹி” அனுப்புவதுடன் சிறப்புச் சலுகைகளும் வழங்கும் அல்லாஹ் சிறந்தவரா? முடிவாக, நபிகள் கூட பாவம் செய்பவர்கள் தான் என்பதை இஸ்லாமியர்களின் இறைவேதத்திலிருந்தே நாம் பார்த்தோம், எனவே, இனி பைபிளை குற்றப்படுத்துவதை இஸ்லாமியர்கள் நிறுத்திக்கொள்ளட்டும்.

இவை உன் சிந்தனைக்கு. முடிவு உன் கையில். மீண்டும் அடுத்த கடிதத்தில் தொடர்வோம்.

இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்

Sunday, July 29, 2012

ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?

அன்புள்ள தம்பி,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
நீ ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தாய். பைபிளின் வசனங்களை மேற்கோள் காட்டி கடிதம் எழுதினாய், அதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என்னுடைய முதல் கடித்தத்தில் நான் முன்வைத்த விவரத்திற்கு நீ பதிலை எழுதினாய், அதாவது இஸ்லாமியர்களின் நோன்பு என்பது ஏதோ பழங்குடி மக்களின் சடங்காச்சரமல்ல, அது இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழக்கமல்ல, அது இயேசு பின்பற்றிய நோன்பு, யூதர்கள் பின்பற்றிய நோன்பு என்றுச் சொல்லி பதில் எழுதியிருந்தாய். அதற்காக, கீழ்கண்ட மூன்று பைபிளின் வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தாய்.
இயேசு 40 நாட்கள் நோன்பு (உபசாவம்) இருந்தார்: மத்தேயு 4:2  அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
இவ்விதமான பிசாசு உபவாசத்திலும்,ஜெபத்தினாலுமே தவிர போகாதுமத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
நோன்பு இருக்கும் போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம் என்று இயேசு கூறிய அறிவுரை:மத்தேயு  6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
உன்னுடைய பதிலுக்காக மிக்க நன்றி, ஆனால் மேற்கண்ட வசனங்களை காட்டி நீ எடுத்த முடிவு தவறானதாகும், அதாவது இஸ்லாமிய நோன்பும், பைபிளின் நோன்பும் ஒன்று தான் என்று நீ நினைத்துக்கொண்டாய். மேலோட்டமாக வசனங்களை நாம் பார்த்தால், இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்கும், ஆனால், சிறிது ஆய்வு செய்தோமானால் அனேக வித்தியாசங்கள் காணப்படும். நீ மேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்தே உனக்கு நான் சில விவரங்களை விளக்குகிறேன்.
இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்:
1)       இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும். அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படி குற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பது நிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையை பொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
2)       இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும் வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள் முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்கு முடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேக எடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).
3)       இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலே வருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்பு இருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமான நாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.
4)       இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள், கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும் கட்டளையில்லை.
5)       முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான் நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பது தெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன் என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை. இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசு சொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது.
6)       இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாக இருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.
7)       ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ள மாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில் அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோ அதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதி நாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதை நான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
8)      புகாரி ஹதீஸில் ”ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும்  நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1901).  இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
இஸ்லாமிய நோன்பிற்கு, கிறிஸ்தவ உபவாசத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை கண்டாய், ஆனால், இஸ்லாமிய நோன்பிற்கும், சேபியன்கள் என்ற ஜனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை காண்போமானால், உனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த சேபியன்கள் ரமளான் மாதத்தில் நோன்பு இருப்பார்கள், காபாவை மதிப்போடு தெய்வீகமாக கருதுவார்கள் மற்றும் தாங்கள் தொழுதுக்கொள்ளும் போது காபாவை நோக்கிய தொழுவார்கள். இவர்களைப் பற்றி குர்-ஆனில் குறிப்பு உண்டு, இவர்களை நம்பிக்கையாளர்களின் பட்டியலில் குர்-ஆன் சேர்த்து பேசுகிறது (குர்-ஆன் 2:62, 5:69 & 22:17  பார்க்க http://answering-islam.org/Silas/pagansources.htm)
தம்பி, இஸ்லாமிய நோன்பும், பைபிளின் நோன்பும் ஒன்றல்ல. சேபியன்கள் பின்பற்றிய பழக்கங்களை, மத சடங்காச்சாரங்களை ஓர் இறைக்கொள்கை என்றுச் சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமில் முஹம்மது புகுத்தியுள்ளார்கிறிஸ்தவ மற்றும் யூதர்களை குறிப்பிடும் போது குர்-ஆன் மூன்று இடங்களில் சேபியன்களையும் குறிப்பிடுகிறதுஇஸ்லாம் ஓர் இறைக்கொள்கை என்று சொல்லிக்கொண்டாலும், அதில் அனேக பல தெய்வ வழிபாட்டு மக்களின் பழங்கங்கள் உள்ளன என்பது திண்ணம். இதுமட்டுமல்ல, அஷூரா நாள் நோன்பு கூட யூதர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதால் முஹம்மது  கடைபிடிக்க ஆரம்பித்தார். ரமளான் மாத நோம்பு கடமையாக்கப்பட்டதும் இந்த அஷூரா நோன்பு தளர்த்தப்பட்டது.
தம்பி, நீ எழுதிய விவரங்கள் தவறானதாகும், அதாவது இயேசுவின் நோன்பும், இஸ்லாமிய நோன்பும் ஒன்றல்ல. பைபிளில் காணப்படும் அனேக விவரங்களை, நிகழ்ச்சிகளை நாம் குர்-ஆனில் காண்பது உண்மை தான், ஆனால் குர்-ஆனில் காணப்படும் தொழுகை, மற்றும் நோன்பு போன்ற விவரங்கள் மட்டும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதல்ல, அவைகள் இஸ்லாமுக்கு முன்பு இருந்த பல தெய்வ வழிப்பாட்டு மக்கள் பின்பற்றிய பழக்கங்களாகும்.
                
உன்னை அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
தமிழ் கிறிஸ்தவன்

ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்

அன்புள்ள தம்பி,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
குர்-ஆன் பற்றியும், இஸ்லாமிய தொழுகைப்பற்றியும் அதிகமாக எழுதிவிட்டேன். அல்லாஹ்வின் சொர்க்கம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத விரும்புகிறேன். சில விஷயங்கள் உரைநடையில் படித்தால் கருத்து விளங்கும், சில முக்கியமான காரியங்களை நாடகவடிவில் அல்லது கதை வடிவில் விளக்கினால், அதன் சாரம் சரியாக புரியும், எனவே இந்த கடிதத்தில் ஒரு கதையைப் போல உனக்கு  ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.
நான் உனக்கு ஒரு சூழ்நிலையை விளக்குகிறேன், அதை கேட்டுவிட்டு, எனக்கு நீ பதில் அளிக்கவேண்டும்.
நீ ஒரு பட்டணத்திற்குள் முதல் முறை நுழைகிறாய், அது உலகிலேயே மிகவும் அழகான பட்டணம். எங்கு பார்த்தாலும் மக்கள் அழகான வீடுகளில் உட்கார்ந்துக்கொண்டு, பழங்கள் சாப்பிட்டுக்கொண்டும், பானங்கள் பருகிக்கொண்டும், அனேக பெண்களோடு உள்ளாசமாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வீட்டில் நடக்கும் நிலை அல்ல, ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சி அல்ல, தொடர்ந்து நித்திய நித்தியமாக இது நடந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கையில் பானம், இன்னொரு கையில் சோலைமயில், எப்போது பார்த்தலும், எங்கு பார்த்தாலும் ஆண்கள் அழகான பெண்களோடு உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரே பெண்ணுடன் இல்லை, பல பெண்களுடன். இவைகளைக் கண்டவுடன் ‘ஒரு சராசரி ஆண் எப்படி இப்படி தொடர்ந்து உடலுறவில் ஈடுபடமுடியும், விஞ்ஞானத்தின் படி இது முடியாதல்லவா?” என்ற கேள்வி உன் மனதில் எழுகிறது. உடனே உன் செவிகளில் ‘இம்மக்களின் இறைவன், இவர்களுக்கு இப்படிப்பட்ட வினோத சக்தியை  கொடுத்துள்ளான்’ என்ற சத்தம் கேட்கிறது.
இப்பொழுதுச் சொல், நீ சென்றுக்கொண்டு இருந்த இடத்திற்கு என்ன பெயர் வைப்பாய்?
1)       பரிசுத்தமான இறைவன் தங்கும் இடமா?
2)       அல்லது பரிசுத்தமில்லாத பட்டணமா?
இவைகளைக் கண்டால் ஒரு விபச்சார விடுதிபோலவும், விபச்சார பட்டணம் போலவும் காட்சி அளிக்கிறது.
தம்பி, இது வேறு எந்த இடமும் இல்லை, நீ வணக்கும் அல்லாஹ்வின் சொர்க்கம் ஆகும். இம்மக்களுக்கு இப்படிப்பட்ட அதீத சக்தியை கொடுக்கப்போகிறவர் வேறு யாருமில்லை, தினமும் ஐந்து வேளை நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் தான். இஸ்லாமின் அல்லாஹ், முஸ்லிம்களுக்கு 100 ஆண்களின் சக்தியை கொடுத்து, மேலும் அவர்கள் உடலுறவுக்கு பெண்களை தயார்படுத்தியும் கொடுக்கிறார்.
கீழ்கண்ட வசனங்களை ஒரு முறை படித்துப்பார், முக்கியமாக இவ்வசனங்கள் பற்றி  இஸ்லாமிய விரிவுரையாளர்களாகிய இப்னு கதீர் போன்றவர்களின் விரிவுரையை நீயே படித்துப்பார். மேலும், இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை கேட்டுப்பார்.
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்எந்த ஜின்னும் தீண்டியதில்லை.  (குர்-ஆன் 55:56)
[எந்த மனிதனும், ஜின்னும் இப்பெண்களை தொடவில்லை என்று அல்லாஹ் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? ஆண்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வண்ணமாக அல்லாஹ் தன் வஹியை இறக்கியுள்ளார். நிச்சயமாக இது உண்மை இறைவனின் வசனமாக இருக்கமுடியாது]
அவற்றில்அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.  (குர்-ஆன்  55:70)
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.  (குர்-ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்எந்த ஜின்னும் தீண்டியதில்லை.  (குர்-ஆன் 55:74)
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும்அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.  (குர்-ஆன் 55:76)
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.  (குர்-ஆன்  56:22)
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாகநாம் உண்டாக்கி,  (குர்-ஆன் 56:35)
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,  (குர்-ஆன் 56:36)
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும்சம வயதினராகவும்,  (குர்-ஆன் 56:37)
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  (குர்-ஆன்  56:38)
ஒரே வயதுள்ள கன்னிகளும்.  (குர்-ஆன் 78:33)
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).  (குர்-ஆன்  78:34)
(முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
நீ இவைகளைக் கண்டு சிறிது வேதனைப்பட்டு இருப்பாய், ஆனால், நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, இது தான் இஸ்லாமிய சொர்க்கம். இஸ்லாமின்படி ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லாஹ் கொடுப்பாராம். ஒரு நாளுக்கு ஒரு ஆண் 100 பெண்களிடம் உடலுறவு கொள்ளமுடியும். இஸ்லாமிய   இறைவன் எவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை கவனி.
இஸ்லாமின் சொர்க்கத்தில் வெறும் கன்னிகள் மட்டும் கிடைப்பார்கள் என்று நான் சொல்லவில்லை, கனிவகைகள், மயக்கம் வராத பானங்கள் என்று அனேகம் உண்டு என்று குர்-ஆன் கூறுகிறது. இஸ்லாமிய பரலோகில் முஸ்லிம்கள் உடலுறவு கொள்வதற்காகவே அழகான பெண்களை படைப்பதாக அல்லாஹ் கூறுகிறார்.  இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமிய பெண்களுக்கும் சொர்க்கத்தில் கணவரல்லாத ஆண்களோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் வகை செய்வானாம். ஒரு முறை பீஜே என்ற இஸ்லாமிய  அறிஞர், இஸ்லாமிய ஆண்களுக்கு புதிய பெண்கள் கிடைப்பது போல, இஸ்லாமிய பெண்களுக்கும் புதிய ஆண்கள் கிடைப்பார்கள் என்று கூறுகிறார், என்னே அல்லாஹ்வின் சொர்க்கம்!
உனக்கு யெகோவா தேவனின் பரலோகம் பற்றி தெரியுமல்லவா?
இறைவன் இருக்கும் இடம் பரிசுத்த இடமாகும், அங்கு பெண் கொடுப்பதுமில்லை, பெண் கொள்வதுமில்லை என்று பைபிள் சொல்கிறது. முக்கியமாக, உடலுறவு என்பது மனித இனம் பூமியில் பெருக இறைவன் அமைத்த ஒரு வழியாகும். அது பரலோகில் தேவையேயில்லை.  
தம்பி, உன்னிடம் தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்:
  • உனக்கு அல்லாஹ் அனேக பெண்களை சொர்க்கத்தில் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறாயா?
  • இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் அனேக பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்ற கோட்பாட்டை நீ ஜீரணித்துக் கொள்கிறாயா? அல்லது இதுவரை இந்த விவரம் பற்றி உன் இஸ்லாமிய நண்பர்கள் உன்னிடம் கூறவே இல்லையா?
  • பைபிளின் பரலோகம் மற்றும் குர்-ஆனின் சொர்க்கம், இவைகளில் எது சரியானதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இஸ்லாமியனாக மாறிய நீ, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இஸ்லாமிய சொர்க்கமே சரியானது என்பதை நம்பவேண்டும். இதைப் பற்றி உன் தனிப்பட்ட கருத்தை அறிய விரும்புகிறேன்.
தம்பி, நீ இதைப்பற்றி அதிகமாக ஆய்வு செய்யவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்கிறேன். இந்த கடிதத்தில் நான் சொன்ன விவரங்கள் சரியானவையா இல்லையா என்பதை நீயே சோதித்துப்பார். இமாம்கள், அறிஞர்கள் இந்த சொர்க்கம் பற்றி அதிகம் பேசி இஸ்லாமிய ஆண்களை மூளைச் சலவை செய்வதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு, அதாவது ஜிஹாதில் ஆண்கள் ஈடுபடவேண்டும் என்பதற்காக இப்படி செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.
ஒரு தம்பியிடம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி பேச வெட்கமாகத் தான் உள்ளது, ஆனால், என்ன செய்யமுடியும் சிலருக்கு சில சத்தியங்கள் சொல்ல இவைகளை சொல்லவேண்டியுள்ளது. நீ எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பற்றிக்கொள்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.